Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

WPL 2024 - குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை அணி!

08:35 AM Mar 10, 2024 IST | Web Editor
Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி.வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள் : நீட் தேர்வுக்கு மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்! - கால அவகாசத்தை நீட்டித்து என்.டி.ஏ அறிவிப்பு

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.

இந்நிலையில்,  மகளிர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்று முதலில் களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பேடிங்கை தேர்வு செய்தது. மும்பை  இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் 191 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, நடப்பு தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 7வது ஆட்டத்தில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5வது வெற்றி பெற்று 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது.

Tags :
GGvsMIGujaratGiantsMIvsGGMumbaiIndiansT20CricketwplWPL2024
Advertisement
Next Article