Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

WPL 2025 Auction | ரூ. 1.60 கோடிக்கு ஏலம் போன தமிழக வீராங்கனை!

06:59 PM Dec 15, 2024 IST | Web Editor
Advertisement

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது.

Advertisement

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யு.பி.எல்) 2025 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் பெங்களூரில் இன்று (டிச.15) நடைபெற்று வருகிறது. பெரும்பாலான அணிகள் முக்கிய வீராங்கனைகளை தக்க வைத்துள்ளன. ஆகவே, 19 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் தமிழக வீராங்களை கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்த மினி ஏலத்தில் 16 வயது தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது. முன்னதாக ஏலத்தில் கமலினிக்கு ரூ.10 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது.

இதேபோல் சிம்ரன் ஷேக்கை ரூ. 1.90 கோடிக்கும், டியான்ட்ரா டாட்டினை ரூ 1.70 கோடிக்கும் குஜராத் ஜெயண்ட்ஸ் வாங்கியுள்ளது. ஐபிஎல் போன்று மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்த பிசிசிஐ சார்பில் மகளிர் பிரீமியர் லீக் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தற்போது அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

யார் இந்த ஜி. கமாலினி?

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி கமாலினி 311 ரன்களை குவித்துள்ளார். அந்த தொடரில் அதிக ரன்களை குவித்தவர்களின் பட்டியலில் கமாலினிதான் இரண்டாம் இடம் ஆவார். இந்த தொடரில் தமிழ்நாடு கோப்பையை வெல்லவும் அவர் முக்கிய பங்காற்றினார். இடதுகை பேட்டரான அவர் அந்த தொடரில் மொத்தம் 10 சிக்ஸர்களை அடித்து, தொடரின் அதிக சிக்ஸர்கள் பட்டியலில் மற்றொரு வீராங்கனையுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டார்.

இவரின் சிக்ஸர் விளாசும் திறனுக்கு இத்தனை டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது.19 வயதுக்குட்பட்டோருக்கான முத்தரப்பு தொடரில் (U19 Women's Tri Series) தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பி அணி சார்பில் 79 ரன்களை குவித்து பலரின் கவனத்தை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து, முதல்முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர் (U19 Women's Asia Cup) வரும் டிச.22ஆம் தேதி மலேசியாவில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் இந்திய அணியில் ஜி. கமாலினி இடம்பெற்றுள்ளார். மேலும் இவர் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர் ஆவார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article