Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

WPL 2024 : மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது யு.பி. வாரியர்ஸ் - முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தல்!

06:35 AM Feb 29, 2024 IST | Jeni
Advertisement

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யு.பி. வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.

லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் யு.பி. வாரியர்ஸ் அணி நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற யு.பி. வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹெய்லி மேத்யூஸ் 55 ரன்கள் விளாசினார்.

இதையும் படியுங்கள் : “திமுக – விசிக தொகுதி பங்கீடு நாளை முடிவடையும்!” – ரவிக்குமார் எம்.பி.

இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யு.பி.வாரியர்ஸ் அணி, 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே விட்டுக்கொடுத்து 163 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை யு.பி. வாரியர்ஸ் அணி பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் 57 ரன்கள் விளாசிய யு.பி. வாரியர்ஸ் அணியின் கிரண் நவ்கிரே ஆட்டநாயகி விருது பெற்றார்.

Tags :
CricketMIvsUPWMumbaiIndiansUPWarriorzUPWvsMIWomensPremierLeagueWPL2024
Advertisement
Next Article