WPL 2024 : கடைசி பந்தில் த்ரில் வெற்றி - டெல்லியை வீழ்த்தி மும்பை அபாரம்!
மகளிர் பிரீமியர் லீக் 2024 தொடரின் முதல் லீக் போட்டியில் டெல்லி அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
மகளிர் பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடரின் அறிமுக நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான், கார்த்திக் ஆர்யன், சித்தார்த் மல்ஹோத்ரா, ஷாகித் கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலர் நடனமாடி அசத்தினர்.
பின்னர் இத்தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆலிஸ் கேப்ஸி 75 ரன்கள் விளாசினார்.
இதையும் படியுங்கள் : சாந்தன் இலங்கை செல்லலாம்! மத்திய அரசு அனுமதி வழங்கியது!
தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மும்பை வீராங்கனை சஜனா சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆட்டத்தை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டநாயகி விருதைப் பெற்றார்.