WPL 2024 இறுதிப்போட்டி : டெல்லி - RCB அணிகள் இன்று மோதல்! - சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?
மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடர் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், யு.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை மோதியது.
கடந்த 13-ம் தேதி நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதியது. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதையும் படியுங்கள் : “கன்னியாகுமரியின் நான்கு வழிச்சாலை திட்டம் பாஜகவின் சாதனை என பிரதமர் மோடி கூறுவது அதிர்ச்சியளிக்கிறது” - விஜய் வசந்த் எம்.பி!
இதையடுத்து மார்ச் 15 ஆம் தேதி நடைபெற்ற பிளே-ஆஃப் சுற்று போட்டியில், புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3வது இடங்களைப் பிடித்ததிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் குவித்த நிலையில், 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.