Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

WPL 2024 : குஜராத் அணியை பந்தாடியது பெங்களூரு - புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

07:00 AM Feb 28, 2024 IST | Jeni
Advertisement

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.

லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது.

இதையும் படியுங்கள் : IND vs ENG டெஸ்ட்: அனில் கும்ளேவின் சாதனையை சமன் செய்த அஸ்வின்!

இதனைத் தொடர்ந்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 110 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Tags :
CricketGGGGvsRCBGujaratGiantsRCBRCBvsGGRoyalChallengersBangaloreWomensPremierLeagueWPL2024
Advertisement
Next Article