மோசமான #HeatExposure - கோடிக்கணக்கான குழந்தைகள் பாதிப்பு என ஐநா கவலை!
மோசமான வெப்ப அலையால் கோடிக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக காலநிலையில் பெரிதளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஒருபுறம் வெயில் அதிகரித்துக் காணப்படுகிற அதேவேளை காலநிலை தப்பிப் போவதால் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு உலகம் முழுக்க மக்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்பில் அதிகாமானோர் உயிரிழப்பதாகவும் அதிலும் குறிப்பாக உயிரிழப்போரில் 20%க்கும் அதிகமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்கிற அதிர்ச்சி தரக்கூடிய ஆய்வுகள் வெளியாகியுள்ளன. பொதுவாக வெப்ப அலையால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
ஏறக்குறைய 50கோடிக்கு அதிகமான குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மடங்கு அதிக வெப்பத்தை எதிர்கொள்வதாகவும் அது அவர்களது தாத்தா பாட்டிகளை எதிர்கொண்டதை விட அதிகம் என ஐ.நா எச்சரித்துள்ளது. உலக அளவில் வெப்ப நிலை உயர்ந்து வரும் நிலையில் 5ல் ஒரு குழந்தை 60வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு வெப்பத்தை ஒவ்வொரு வருடமும் எதிர்கொள்வதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
பெரியவர்களை விட குழந்தைகள் வெப்ப அலையால் மிக எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் என யுனிசெஃப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக குழந்தைகளை பாதிக்கும் சராசரி வெப்ப அளவாக 95டிகிரி செல்சியஸை அளவுகோலாக வைத்துள்ளது.
- மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் உள்ள 39 சதவீத குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் மூன்றில் ஒரு பகுதியில் 95 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்ப நிலையை எதிர்கொள்கின்றனர்
- மாலி நாட்டில் 15 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் வருடத்திற்கு 200 நாட்களுக்கு மேல் 95 டிகிரி அல்லது அதற்கு மேல் வெப்பநிலையை எதிர்கொள்கின்றனர்.
- லத்தீன் அமெரிக்காவில், 48 மில்லியன் குழந்தைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இருமடங்கு வெப்பநிலையை எதிர்கொள்கின்றனர்