Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உலக பணக்காரர் பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க் - முதல் இடத்தில் யார்..?

உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி ஆரக்கல் இனை நிறுவனர் லாரி எலிசன் முதலிடம் பிடித்தார்.
07:18 PM Sep 11, 2025 IST | Web Editor
உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி ஆரக்கல் இனை நிறுவனர் லாரி எலிசன் முதலிடம் பிடித்தார்.
Advertisement

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு என்பது உலகின் பணக்காரர்களின்  தரவரிசை பட்டியலை தினசரி அடிப்படையில் அறிவிக்கும் நிறுவனம் ஆகும். இது நியூயார்க்கில் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் புள்ளிவிவரங்கள் புதுப்பிக்கப்படுகிறது.

Advertisement

நேற்று வரை இப்பட்டியலில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றூம் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில், ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், எலான் மஸ்க்கை முந்தி, உலகின் நம்பர் 1 பணக்காரராக மாறியுள்ளார். ஆரக்கல் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் அதிகரித்ததால், இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் எலான் மஸ்க் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

யார் இந்த லாரி எலிசன்..?

லாரி எலிசன் 1944 இல் பிறந்தவர். இவர் ஒரு அமெரிக்க தொழில்முனைவோர் ஆவார். 1977 ஆம் ஆண்டு ஆரக்கிள் கார்ப்பரேஷனை இணைந்து நிறுவனரான அவர்  2014 வரை அதன் சிஇஓவாக பணியாற்றினார். தற்போது அவர் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் நிர்வாகத் தலைவராகவும் உள்ளார். இவரது மதிப்பிடப்பட்ட நிகர மதிப்பு $393 பில்லியன் ஆகும்.

இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி 18 ஆவது இடத்திலும் கௌதம் அதானி 21ஆவது இடத்திலும் உள்ளனர்.

Tags :
BloombergBillionairesIndexelonmusklarryelisonlatestNews
Advertisement
Next Article