உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்கள் யார்?
2024 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான தகவல்களை அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அத்தோடு, கடந்த ஆண்டில் இந்த பட்டியலில் 169 இந்தியர்கள் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதல் 10 இடம்:
இந்நிலையில், 100 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய/ ஆசியளவில் முதலிடத்தில் இருப்பதோடு உலகளவில் 9 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேவேளை, அதற்கு அடுத்ததாக உலகளவில் 17-வது இடத்தில் 84 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி இடம்பெற்றுள்ளார்.
அதன் அடிப்படையில், உலக பணக்காரர்களின் பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ள இந்தியர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்புகள் இதோ...
- முகேஷ் அம்பானி - 116 பில்லியன் சொத்து மதிப்பு
- கெளதம் அதானி - 84 பில்லியன் சொத்து மதிப்பு
- ஷிவ் நாடார் -36.9 பில்லியன் சொத்து மதிப்பு
- சாவித்திரி ஜிண்டால் -33.5 பில்லியன் சொத்து மதிப்பு
- திலிப் ஷாங்வி - 26.7 பில்லியன் சொத்து மதிப்பு
- சைரஸ் பூனாவாலா -21.3 பில்லியன் சொத்து மதிப்பு
- குஷல் பால் சிங் -20.9 பில்லியன் சொத்து மதிப்பு
- குமார் பிர்லா -19.7 பில்லியன் சொத்து மதிப்பு
- ராதாகிஷன் தமானி -17.6 பில்லியன் சொத்து மதிப்பு
- லக்ஷ்மி மிட்டல் -16.4 பில்லியன் சொத்து மதிப்பு
இந்த பட்டியலில் இடம்பெற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யார் என இங்கு பார்ப்போம்.
ஷிவ் நாடார்:
ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஷிவ் நாடார் உலக பணக்காரர்கள் பட்டியலில் 39-வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் 3-வது இடம். 78 வயதான இவரின் சொத்து மதிப்பு 34.6 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் ரூ. 2.5 லட்சம் கோடி.
ஸ்ரீதர் வேம்பு சகோதர்கள்:
ஸோகோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்புவின் சகோதர் மற்றும் சகோதரி பில்லியனியர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவரது தங்கையான ராதா வேம்பு உலகளவில் பணக்காரர் பட்டியலில் 949-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 3.3 பில்லியன் அமெரிக்க டாலர். (ரூ.24 ஆயிரம் கோடி) அதே போல சகோதரர் சேகர் வேம்பு, 2.5 பில்லியன் சொத்து மதிப்போடு (ரூ.18,500 கோடி) உலகளவில் 1330 இடத்தில் உள்ளார்.