Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு - முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு.!

07:15 AM Jan 07, 2024 IST | Web Editor
Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. அவற்றில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் இன்றும் நாளையும் நடைபெறவிருக்கிறது.  இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.  மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.  இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள் : உலக முதலீட்டாளர்கள் மாநாடு – சிங்கப்பூர் நாட்டிலுள்ள நிறுவனங்களின் சார்பாக 5 பில்லியன் டாலர் முதலீடு!

இன்றை நிகழ்வுகள் என்னஎன்ன..?

இன்று  காலை 10 மணி அளவில் தமிழ்த்­தாய் வாழ்த்­து­டன் மாநாடு தொடங்­க உள்ளது. அதனைத்தொடர்ந்து, தமிழ்­நாடு தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா வர­வேற்­புரை ஆற்­ற உள்ளார். அதன்­பின், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரை­யாற்­று­கி­றார்.

மேலும், மத்திய தொழில்­துறை அமைச்­சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்­தி­ன­ராக பங்­கேற்று உரை­யாற்­று­கி­றார். இந்த மாநாட்­டில் தொழில்­கள் அடிப்­ப­டை­யி­லான பல்­வேறு தனித்­தனி அமர்­வு­கள் நடத்­தப்­ப­ட உள்ளன. ஜவுளி, காலணி தொழில்­கள், மின்­சார வாக­னங்­கள் மற்றும் வேளாண் தொழில்­நுட்­பங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு அமர்­வு­கள் 2 நாட்­க­ளும் நடத்­தப்­பட உள்­ளன.

உலக முத­லீட்­டாளர் மாநாட்­டின் தொடக்க விழாவை பள்ளி, கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு ஒளிப­ரப்ப மாவட்ட ஆட்­சி­யர்­கள் மூலம் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்ளது.  இந்த மாநாட்­டின் இரண்­டாம் நாளான நாளை பல்­வேறு நாடு­க­ளின் தொழில்­நி­று­வ­னங்­கள் தமிழ்­நாடு அர­சு­டன் புரிந்­து­ணர்வு   ஒப்­பந்­தங்­க­ளில் கையெ­ழுத்­திட உள்­ளன. ஏற்கனவே உலகப் புகழ் பெற்ற அடிடாஸ் நிறுவனத்துடன் புரிந்து ஒப்பந்தம் முடிவாகியுள்ளது அறிவிப்பு வெளியானது. அதன் விளைவாக அடிடாஸ் நிறுவனத்தின் “திறன் மற்றும் மேம்பாட்டு மையம்” சென்னையில் அமைக்கப்பட உள்ளது. சீனாவிற்கு பிறகு அதன் அடிடாஸ் நிறுவனம் ஆசியாவிலேயே சென்னையில்தான் அமைய உள்ளது.

சில புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் முன்­னி­லை­யில், தமிழ்­நாடு அர­சின் தொழில் வழி­காட்டி மையம் மூலம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இத­னைத் தொடர்ந்து நாளை மாலை 4.30 மணிக்கு உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் நிறை­வுரை ஆற்­று­கி­றார்.

Tags :
மு.க.ஸ்டாலின்திமுகCMO TamilNaduCMOTamilNaduMK StalinMKStalinTN GovtTNGovtWorld Investors ConferenceWorld Investors Summit
Advertisement
Next Article