உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மத்திய அமைச்சர்பியூஸ் கோயல் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதையும் படியுங்கள் : உலக முதலீட்டாளர்கள் மாநாடு – சிங்கப்பூர் நாட்டிலுள்ள நிறுவனங்களின் சார்பாக 5 பில்லியன் டாலர் முதலீடு!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்றினார். அதன்பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார். இந்த மாநாட்டில் தொழில்கள் அடிப்படையிலான பல்வேறு தனித்தனி அமர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஜவுளி, காலணி தொழில்கள், மின்சார வாகனங்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் 2 நாட்களும் நடத்தப்பட உள்ளன.
இந்த மாநாட்டின் தொடக்கமாக 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.