Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகள் - நாளை இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதல்!

08:52 AM Nov 14, 2023 IST | Web Editor
Advertisement

நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் நாளை இந்தியா-நியூஸிலாந்தும், நாளை மறுநாள் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன.

Advertisement

ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் 45 லீக் ஆட்டங்கள் முடிவுற்று தற்போது நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் நாளை மும்பை வாங்டே மைதானத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா. அதற்கு பழிதீர்க்கும் வகையில் தற்போதைய அரையிறுதியில் இந்தியா சிறப்பாக ஆடி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா 1983, 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றுள்ளது. நியூஸி. ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. இந்த உலகக் கோப்பையில் முதலிடத்தில் இருந்த நியூஸி. தட்டுத்தடுமாறி 4வது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் இந்தியா 9 லீக் ஆட்டங்களிலும் வென்று தகுதி பெற்றது.

கொல்கத்தாவில் நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் 5 முறை சாம்பியன் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா மோதுகின்றன. ஆஸி. அணி முதலிரண்டு ஆட்டங்களில் தோற்ற நிலையில், தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. தென்னாப்பிரிக்காவும் 7 ஆட்டங்களில் வெற்றியுடன் நுழைந்துள்ளது. முதன்முறையாக உலகக் கோப்பை இறுதிக்கு தென்னாப்பிரிக்கா தகுதி பெறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அரையிறுதி போட்டிக்கு அதிகமுறை தகுதி பெற்ற அணிகள்: ஆஸ்திரேலியா 9, நியூஸிலாந்து 9, இந்தியா 8, இங்கிலாந்து 6, பாகிஸ்தான் 6, தென்னாப்பிரிக்கா 5, மே.இந்திய தீவுகள் 4, இலங்கை 4, கென்யா 1.

Tags :
AustraliaICC Cricket WorldCup 23ICC Mens Cricket WorldCup 2023ICC WorldCup 2023IndiaNews7Tamilnews7TamilUpdatesnewzealandsemi finalsSouth AfricaWorldCup 2023WorldCup 2023 india
Advertisement
Next Article