Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி! மழையால் சற்று நேரம் தடைபட்டது!

04:25 PM Nov 16, 2023 IST | Web Editor
Advertisement

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி மழை காரணமாக சற்று நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

Advertisement

2023 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் நிறைவுற்ற நிலையில் அரையிறுதியின் நாக் அவுட் போட்டியில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில், இந்திய 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

இதனை தொடர்ந்து அரையிறுதிப் போட்டியின் இரண்டாம் போட்டி இன்று மதியம் கொல்கத்தாவில் தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணியும், தென்னாப்பிரிக்க அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும், பவுமாவும் களம் இறங்கினர். இதில் அணியின் கேப்டனான பவுமா 4 பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இதனை அடுத்து டி காக்கும் 14 பந்துகளை சந்தித்த நிலையில் 3 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து களம் இறங்கிய வான்டர் டசன், மார்கம் ஆகிய இருவரும் முறையே 6, 10 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினர். இதனை அடுத்து ஹென்ரிச் க்ளாசன் மற்றும் டேவிட் மில்லர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆடத்தொடங்கினர்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிடவே போட்டி இடையில் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்றவுடன் சரியாக 3.55 pm மணியளவில் மீண்டும் போட்டி தொடங்கியது. இந்நிலையில், 17 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 50 ரன்களை கடந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

Tags :
Australiachose to batCWC 2023CWC 23news7 tamilNews7 Tamil SportsNews7 Tamil UpdatesRainSA vs AUSSouth AfricaToss winWet GroundWorld Cup 2023
Advertisement
Next Article