உலகக் கோப்பை யாருக்கு..? - தோனியைத் தொடர்ந்து கோப்பையை தன்வசமாக்குவாரா ரோஹித் சர்மா?
17ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வெல்லுமா என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் உள்ளனர்
கிரிக்கெட்.. என்பது வெறும் சொல்லோ.. அல்லது சாதரண விளையாட்டோ அல்ல. அதேபோல அது நமது நாட்டின் தேசிய விளையாட்டும் அல்ல. ஆனால் கிரிக்கெட் இந்தியாவின் உணர்வுகளில் ஒன்றாக கலந்துள்ளது. பள்ளிக்கூட வசதிகளிலேயே இல்லாத பழங்குடி கிராமத்தில் கூட சச்சின் மற்றும் தோனியின் பெயரை உச்சரித்துக் கொண்டே தென்னை மட்டையில் கிரிக்கெட் விளையாடும் குழந்தைகளை இன்றும் காணலாம்.
2007ம் ஆண்டு தொடங்கிய டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றாலும் அதன்பின்னர் 17 வருடங்கள் கடந்த நிலையில் ஒரே ஒரு கோப்பையுடன் இந்தியா விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 103ரன்களிலேயே சுருட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி.
2007ம் ஆண்டு உலகக் கோப்பை தோனிக்கு எப்படி ஸ்பெஷலான ஒன்றோ அதேபோல தற்போதைய உலகக் கோப்பை இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
17 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது உலகக் கோப்பையை இந்தியா தன்வசமாக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.