உலகக்கோப்பை 2023 : நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.
உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வருகின்றன.
அந்த வகையில் நடப்பு தொடரின் 34வது போட்டியில், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும், ஹஷ்மதுல்லா ஷஹிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில், 3 வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது. இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான், தனது பலத்தை நிரூபிக்க இன்றைய போட்டியிலும் வெற்றி பெற முனைப்பு காட்டும்.
இதையும் படியுங்கள் : “இஸ்ரேல் – ஹமாஸ் போரின் அழிவு; நீங்கள் பார்ப்பது 5% தான்!” – போர்க்களத்தில் சிக்கியுள்ள எகிப்திய பெண் கதறல்!!
மற்றொரு புறம் நெதர்லாந்து அணி, இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 தோல்வி, 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அரையிறுதி வாய்ப்பு தள்ளிப் போனாலும், வெற்றியை ருசிக்க வேண்டும், பலம் வாய்ந்த அணிகளுக்கு சவாலாக இருக்க வேண்டும் என்ற நோக்குடன், நெதர்லாந்து இன்றைய போட்டியில் களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.