Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜூலை 8ம் தேதி பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் - தவெக அறிவிப்பு!

பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
01:30 PM Jul 06, 2025 IST | Web Editor
பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
Advertisement

தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், தமிழகத்தின் இரண்டு கோடி இல்லங்களில் இரண்டு கோடி கழக உறுப்பினர்கள் என்ற இலக்குடன் உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

Advertisement

இது குறித்துச் சென்னை, பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில், வருகிற 08.07.2025 அன்று காலை 10.35 மணியளவில், பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் இரண்டு நிர்வாகிகளை மட்டும் மடிக்கணினியுடன் அழைத்து வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்களுடன். கழகத்தின் மற்ற நிர்வாகிகளை இந்தக் கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்று கழகத் தலைவர் அவர்கள் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advisory meetingAnnouncementChennaitvktvkleadervijayWorkshop
Advertisement
Next Article