"வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது... Love You அஜித் சார்" - நடிகர் பிரசன்னா நெகிழ்ச்சி!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித்குமார். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் குமார் – த்ரிஷா மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்திரி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி டிரெண்டானது. இப்படம் இன்று (ஏப்.10) பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. முன்னதாக ‘குட் பேட் அக்லி’ ரிலீஸை ஒட்டி ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நடிகர் பிரசன்னா இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தது குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்த அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது
"எனக்குப் பிடித்த நடிகருடன் இணைந்து நடித்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இந்த உன்னதமான மனிதருடன் செலவழித்த ஒவ்வொரு தருணமும் மறக்க முடியாதவை. Love You அஜித் சார்"
இவ்வாறு நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.