Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WomensT20WorldCupFinal | தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

07:21 AM Oct 20, 2024 IST | Web Editor
Advertisement

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

Advertisement

9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா (பி பிரிவு) அணிகள் தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. மேலும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்காளதேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

இதனையடுத்து, நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணியும், 2-வது அரைஇறுதியில் வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் துபாயில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

நியூசிலாந்து அணி 3வது (2009, 2010, 2024) முறையாகயும், தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 2வது முறையாகயும் இறுதிப்போட்டிக்கு நுழைகின்றன. முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags :
New Zealandnews7 tamilNZ vs SASA vs NZSportswomens cricketWomens T20 World Cup
Advertisement
Next Article