Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WomensT20WorldCup | இலங்கைக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

09:35 PM Oct 09, 2024 IST | Web Editor
Advertisement

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

Advertisement

9வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. அந்த 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ரன்களை சேர்த்தது.

ஹர்மன்பிரீத் கவுர் (சி) 52 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 50 ரன்களும், ஷஃபாலி வர்மா 43 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் ரேணுகா சிங் 2 விக்கெட்டும், ஸ்ரேயங்கா பாட்டீல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். தொடர்ந்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள இலங்கை அணி 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

Tags :
CricketIND vs SLIndianews7 tamilSL vs INDSportsSports UpdateSri LankaT20 World CupWomens T20 World Cup
Advertisement
Next Article