Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#WomensT20WorldCup | பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

11:20 AM Oct 12, 2024 IST | Web Editor
Advertisement

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

9வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (அக்.11) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வீராங்களைகள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த வகையில், பாகிஸ்தான் அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முனீபா அலி 7 ரன்களிலும், சிட்ரா அமீன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை அடுத்து ஆடிய சதாப் சமாஸ் 3 ரன்களில் வெளியேறினார். பாகிஸ்தான் அணி தரப்பில், அதிகபட்சமாக அலியா ரியாஸ் 26 ரன்கள் எடுத்தார்.

இறதியில், பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. இதன்படி, ஆஸ்திரேயிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பெத் மூனி மற்றும் கேப்டன் அலிசா ஹீலி ஆகியோர் களமிறங்கினர். இதில் பெத் மூனி 15 ரன்களில் அவுட் ஆனார்.

தொடர்ந்து ஆடிய அலிசா ஹீலி 37 ரன்கள் எடுத்த நிலையில், காயம் காரணமாக வெளியேறினார். இறுதியில் 11 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பெர்ரி 22 ரன்களும், ஆஷ்லி கார்ட்னர் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Tags :
AUS vs PAKAustraliaCricketnews7 tamilPAK vs AUSpakistanSportsT20 World CupWomens T20 World Cup
Advertisement
Next Article