Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகளிர் உலக கோப்பை : இந்தியாவுக்கு 289 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 289 ரன்கள் குவித்துள்ளது.
07:25 PM Oct 19, 2025 IST | Web Editor
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 289 ரன்கள் குவித்துள்ளது.
Advertisement

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில், இந்தூரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

Advertisement

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து , களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து அணியில் அதிகப்பட்சமாக ஹீதர் நைட் 109 குவித்தார். மேலும் மற்றொரு ஆட்டக்காரரான எமி ஜோன்ஸ் 56 ரன்கள் விளாசினார்.

இந்திய அணியில்  தீப்தி சர்மா 10 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாடி வருகிறது.

Tags :
iccwomenworldcupindiawomenINDvsAUSlatestNewsSportsNews
Advertisement
Next Article