மகளிர் உலகக் கோப்பை : 2 ஆவது அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு நிர்ணையித்த ஆஸ்திரேலியா..!
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மறும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவுற்றுள்ள நிலையில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றன.
இந்த நிலையில் இன்று நவிமும்பையில் நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செயதது.
அதன் படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் முக்கிய தருணத்தில் பாட்னர்ஷிப் சேர்ந்த லிட்ச்பீல்ட் - பெர்ரி ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. அதிரடியாக விளையாடிய லிட்ச்பீல்ட் 93 பந்துகளில் 119 ரன்கள் குவித்தார்.மறுபுறம் எல்லிஸ் பெரி 77 ரன்களும், ஆஷ்லே கார்டன்ர் 63 ரன்களும் விளாச அணியின் ஸ்கோர் கணிசமான அளவு உயர்ந்தது.
இந்திய அணி சார்பில், ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 339 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது.
 
 
            