Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகளிர் டி20 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி - இந்திய அணி பேட்டிங் தேர்வு!

02:30 PM Jul 28, 2024 IST | Web Editor
Advertisement

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement

கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த போட்டி கடந்த 2012-ம் ஆண்டு முதல் டி20 போட்டி தொடராக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9-வது ஆசியகோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஜூலை 19-ந் தேதி தொடங்கியது.

8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி 4 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டது. இந்தியா பாகிஸ்தான், நேபாளம், அமெரிக்கா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம் பெற்றிருந்தது. லீக் சுற்றுகளின் முடிவில், ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. பி பிரிவில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதேபோல் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனைத் தொடர்ந்து இன்று, இலங்கை தம்புலா மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  இதுவரை 8 முறை நடந்து முடிந்துள்ள ஆசியகோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் 8 முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி 7 முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. அதேபோல் இலங்கை அணி இதுவரை 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று 6-வது முறையாக மீண்டும் இந்திய அணியை சந்திக்கிறது.

Tags :
BattingCricketIndiaINDWvsSLWSri LankaWomen's Asia Cup T20 Final
Advertisement
Next Article