Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஜனவரி முதல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!” - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தகவல்!

03:24 PM Nov 13, 2024 IST | Web Editor
Advertisement

“2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்” என கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்‌ தெரிவித்துள்ளார்.

Advertisement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அதன்படி கஞ்சநாயக்கன்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 17 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடத்தையும், சுக்கில நத்தம் கிராமத்தில் ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள நியாய விலை கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து மீனாட்சிபுரம் மற்றும் ஆமணக்கு நத்தம் கிராமத்தில் தலா ரூ.8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கும், ரூ.21 லட்சம் மதிப்பில் புதிதாக பைப்லைன் அமைக்கும் பணிகளுக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து குருந்த மடம் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கதொட்டியையும், ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்‌,

“உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு 50 வருட உறவு.‌ உங்களைப் பார்ப்பதில் எனக்கு சந்தோசம். என்னை பார்ப்பதில் உங்களுக்கு சந்தோசம்.‌ கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சிலருக்கு விடுபட்டுள்ளது.‌ வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அதேபோல முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.‌ எனக்கு ஆயுள் உள்ளவரை உங்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்.‌

கடவுள் என்னை எத்தனை நாட்களுக்கு ஓட விடுகிறாரோ, அத்தனை நாட்களும் உங்களுக்காக நான் ஓடிக்கொண்டே இருப்பேன்” என பேசினார். இந்த நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
DMK Ministerkalaingar magalir urimai thogaiKKSSR Ramachandran
Advertisement
Next Article