Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகளிர் பிரீமியர் லீக் | டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
06:20 AM Mar 16, 2025 IST | Web Editor
Advertisement

3வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது. இதன் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 10 புள்ளி பெற்றாலும் ரன்-ரேட் அடிப்படையில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. குஜராத் ஜெயண்ட்ஸ் 3வது இடம் பிடித்தது. உ.பி.வாரியர்ஸ், பெங்களூரு அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

Advertisement

இதில் வெளியேற்றுதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 47 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், நேற்று (மார்ச் 15) நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 66 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசென் மற்றும் நல்லபுரெட்டி சரணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெக் லேனிங் மற்றும் ஷபாலி வர்மா இறங்கினர். இதில் மெக் லேனிங் 13 ரன்களிலும், ஷபாலி வர்மா 4 ரன்களிலும், அடுத்து வந்த ஜெஸ் ஜோனசென் 13 ரன்களிலும், அன்னபெல் சதர்லேண்ட் 2 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

தொடர்ந்து, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் மரிசான் கேப் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். இதில் ஜெமிமா 30 ரன்களிலும், அடுத்து வந்த சாரா பிரைஸ் 5 ரன்களிலும் அவுட் ஆகினர். இவர்களை அடுத்து நிகி பிரசாத் களம் இறங்கினார். மறுபுறம் ஆடிய மரிசான் கேப் 40 ரன்னிகளிலும், அடுத்து வந்த ஷிகா பாண்டே ரன் எடுக்காமலும் வெளியேறினர்.

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி  2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கைவர் பிரண்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Tags :
CricketDC vs MIdelhi capitalsmi vs dcMumbai Indiansnews7 tamilNews7 Tamil UpdatesSportsSports UpdateWomen's Premier LeagueWPL 2025
Advertisement
Next Article