Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகளிர் பிரீமியர் லீக் | பெங்களூரை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி பெற்றது.
06:52 AM Feb 28, 2025 IST | Web Editor
Advertisement

5 அணிகள் பங்கேற்றுள்ள 3வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று (பிப்.27) நடைபெற்ற 12 வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது.

Advertisement

குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூரு அணி வீராங்களைகள் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக 33 கனிகா ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி இறங்கியது.

அதன்படி, பெத் மூனி 17 ரன்களும், தயாளன் ஹேமலதா 11 ரன்களும் , ஹர்லீன் தியோல் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஆஷ்லே கார்ட்னர், போப் லிட்ச்பீல்ட் இருவரும் இணைந்து ரன்களை குவித்தனர். நிலைத்து ஆடிய ஆஷ்லே கார்ட்னர் அரைசதம் அடித்தார். இறுதியில் 16.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு குஜராத் அணி 126 ரன்கள் எடுத்தது . இதன் மூலம், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் அபாரா வெற்றி பெற்றது . ஆஷ்லே கார்ட்னர் 58 ரன்களும், போப் லிட்ச்பீல்ட் 30 ரன்களும் எடுத்தனர்.

Tags :
CricketGG vs RCBGujarat Giantsnews7 tamilNews7 Tamil UpdatesRCB vs GGRoyal Challengers BengaluruSportsSports UpdateWPL 2025
Advertisement
Next Article