Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக் 2024 - இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆர்சிபி!

06:51 AM Mar 16, 2024 IST | Jeni
Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக்கின் பிளே-ஆஃப் சுற்று போட்டியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து அசத்தியுள்ளது.

Advertisement

மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடர் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், யு.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை மோதியது.

கடந்த 13-ம் தேதி நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதியது. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற பிளே-ஆஃப் சுற்று போட்டியில், புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3வது இடங்களைப் பிடித்ததிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆர்சிபி தரப்பில் எல்லிஸ் பெர்ரி 66 விளாசினார். இதையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும்... அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு!

இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நாளை (மார்ச் 17) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மெக் லான்னிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோத உள்ளது.

Tags :
CricketFinalsmiMIvsRCBMumbaiIndiansRCBRCBvsMIRoyalChallengersBangaloreWomensPremierLeagueWPL2024WPLFinals
Advertisement
Next Article