Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகளிர் உரிமைத்தொகை : 7.35 லட்சம் புதிய பயனாளிகளுக்கு நாளை வழங்குகிறார் முதலமைச்சர்

09:04 PM Nov 09, 2023 IST | Jeni
Advertisement

மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை உரிமைத் தொகையினை வழங்க உள்ளார்.

Advertisement

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக உரிமைத் தொகையானது, திட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களில் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். அதில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக இறுதி செய்யப்பட்டுள்ளனர். இந்த புதிய பயனாளிகளுக்கும் ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகையினை நாளை (10.11.2023) வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : இங்கிலாந்து கேப்டனாக தொடர விரும்புகிறேன் - ஜோஸ் பட்லர் விருப்பம்

இத்திட்டத்தில் தற்போது இணைந்துள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் உள்ளிட்ட பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கிடும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நாளை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நாளைய தினமே அமைச்சர்கள் தலைமையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

Tags :
CMOTamilNaduKalaignarMagalirUrimaiThittamMagalirUrimaiThogaiMKStalinNewTNGovt
Advertisement
Next Article