Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: தாய்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!

07:16 AM Oct 28, 2023 IST | Web Editor
Advertisement

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா 7-1 கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.

Advertisement

மகளிருக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ஹாக்கி போட்டிகள் வரும் நவம்பர் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இந்நிலையில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக மோனிகா (7’), சலிமா டெடெ (15’), சங்கீதா குமாரி (29’, 45’, 45’), தீபிகா (40’), லால்ரெம்சியாமி (52’) ஆகியோர் ஸ்கோர் செய்தனர். தாய்லாந்துக்காக சுபான்சா சமான்சோ (22’) கோலடித்தார்.

முன்னதாக மாலை 4 மணிக்கு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஜப்பான் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும், மாலை 6.15 மணிக்கு நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான தென்கொரியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவையும் வீழ்த்தின.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜப்பான்-தென்கொரியா (மாலை 4 மணி), தாய்லாந்து-சீனா (மாலை 6.15 மணி), இந்தியா-மலேசியா (இரவு 8.30 மணி) அணிகள் மோத உள்ளன.

Tags :
Asia Cup HockeyChampionIndiaIndian hockey teamNews7Tamilnews7TamilUpdatesthailandwomen
Advertisement
Next Article