மகளிர் ஆசிய கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை அணி!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தாய்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு இலங்கை அணி முன்னேறியுள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பெற்ற இலங்கை - தாய்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தாய்லாந்து அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
தாய்லாந்து அணியில் அதிகபட்சமாக கன்னாபட் கொஞ்சாரோ 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில், தாய்லாந்து அணி 20 ஓவக்ரள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 93 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விஷ்மி குணரத்னே, கேப்டன் சாமரி அடப்பட்டு ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.