Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகளிர் ஆசிய கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான் அணி!

10:08 AM Jul 22, 2024 IST | Web Editor
Advertisement

மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

9வது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் கடந்த 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.  அந்த வகையில், நேற்று நடை இன்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி பாகிஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.  இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் நேபாள அணி 6 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் எடுத்தது. நேபாள அணி தரப்பில் அதிகபட்சமாக கபிதா ஜோஷி 31 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் சாடியா இக்பால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குல் பெரோசாக் மற்றும் முனீபா அலி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.  அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த குல் பெரோசாக் இலக்கை நெருங்கிய நிலையில் ஆட்டமிழந்தார்.

வெறும் 11.5 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்த பாகிஸ்தான் அணி 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முனீபா அலி 46 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நடப்பு தொடரில் பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.  முன்னதாக நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்தது.

Tags :
#SportsCricketNEP vs PAKNepalPAK vs NEPpakistanWomens Asia Cup2024womens cricket
Advertisement
Next Article