Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மாதவிடாய் காலத்தில் பெண்கள் வீட்டிற்குள் நுழைய தடை..”- இப்படிப்பட்ட இந்தியாவில் வாழ்வதாக #SupremeCourt நீதிபதி வேதனை!

06:46 PM Oct 20, 2024 IST | Web Editor
Advertisement

மாதவிடாய் காலத்தில் பெண் 5 நாட்களுக்கு தனது வீட்டிற்கு வெளியே அமர்த்தப்பட்டுள்ளதாகவும், இப்படிப்பட்ட ஒரு நாட்டில் தான் நாம் இப்போதும் வாழ்ந்து வருவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட பல்வேறு நீதிபதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மாதவிடாய் காலத்தின்போது வீட்டிற்கு வெளியே தங்க வைக்கப்பட்ட ஒரு பெண்ணின் கொடூரமான கதையை உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் பகிர்ந்தார்.

ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டி பேசிய சஞ்சய் கரோல், "இந்த புகைப்படம் நான் 2023-ம் ஆண்டு ஒரு தொலைதூர கிராமத்தில் எடுத்தேன். மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் 5 நாட்களுக்கு தனது வீட்டிற்கு வெளியே அமரவைக்கப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு நாட்டில் தான் நாம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்களை பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் அவர்களின் மொழியைப் பேசினீர்களா? நீங்கள் அவர்களை அணுகினீர்களா? நீங்கள் அவர்களைப் புரிந்து கொண்டீர்களா?

இந்தியா என்பது டெல்லி மற்றும் மும்பை மட்டுமில்லை. நாம் இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலர்கள். இந்தியாவின் கடைக்கோடியில் வசிக்கக்கூடியர்கள் குறிப்பாக நீதி கிடைக்காத ஒருவரை அல்லது நீதி என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரை சந்திக்க வேண்டும். அவர்களுடைய மொழியில் பேசி நாட்டின் சட்டத்தை புரிய வைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Tags :
GoajudgeMenstruating WomanNews7TamilSanjay CarolSCI
Advertisement
Next Article