Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெண் உயிரிழந்த விவகாரம் - அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு!

09:01 PM Dec 05, 2024 IST | Web Editor
Advertisement

புஷ்பா-2 படம் பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிலையில், அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார். இப்படம் பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவானது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் இன்று வெளியானது.

இதனிடையே இப்படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நேற்று திரையிடப்பட்டது. இதனைப் பார்க்க தில்சுக் நகரில் வசிக்கும் ரேவதி (35) என்ற பெண் தனது கணவர் பாஸ்கர் மற்றும் இரண்டு குழந்தைகளான ஸ்ரீ தேஜ் (13), சன்விகா (7) ஆகியோருடன் வந்துள்ளார். அல்லு அர்ஜூனும் இந்த பிரீமியர் காட்சியை பார்க்க வந்துள்ளார். அப்போது அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக அதிக அளவிலான ரசிகர்கள் தியேட்டர் முன்பு கூடியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி மயக்கமடைந்துள்ளார். அவரது மகனுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சுயநினைவை இழந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ரேவதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஸ்ரீ தேஜ் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இரவு 10:30 மணியளவில், தியேட்டருக்கு வெளியே வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி செய்த போதிலும், இந்த சம்பவம் அரங்கேறியது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தியேட்டர் நிர்வாகம் மீதும், அல்லு அர்ஜூன் மீதும் ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தியேட்டர் நிர்வாகம் கூட்டத்தை சரியாக கையாளாத காரணத்தால் ஏற்பட்ட மரணம் என்றும், அல்லு அர்ஜூன் தன்னுடைய வருகை பற்றி போலீசாருக்கு தெரிவிக்காத காரணத்தால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய இயலாமல் போனது. எனவேதான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அந்த பெண் மரணம் அடைந்த விட்டார் என்ற கோணத்திலும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஹைதராபாத் காவல்துறை துணை ஆணையர் கூறியதாவது;

“அல்லு அர்ஜூன் வருவது குறித்து தியேட்டர் நிர்வாகம் சார்பிலும், அவரது தரப்பிலும் இருந்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த திரையரங்கு நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. அல்லு அர்ஜூன் செல்ல தனி நுழைவாயில் எதுவும் அமைக்கப்படவும் இல்லை” என கூறியுள்ளார்.

Tags :
Allu arjuncaseHyderabad Policepushpa 2
Advertisement
Next Article