ஆட்டோ ஓட்டுநருக்கு பேப்பர் ரோஜாவை பரிசளித்த பெண் - வைரலாகும் வீடியோ!
பெண் ஒருவர் தனது ஊபர் ஆட்டோ ஓட்டுநருக்கு காகிதத்தால் செய்யப்பட்ட சிவப்பு ரோஜாவை பரிசாக வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பரபரப்பான நகர வாழ்க்கையில், மக்கள் பொதுவாக அந்நியர்களுடன் பழகுவதைத் தவிர்க்கிறார்கள். ஆனால், உங்கள் எதிரில் இருப்பவர் உங்களை நம்பினால், அவர்கள் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசத் தொடங்குவார்கள். ஓலா அல்லது ஊபர் ஆட்டோ ஓட்டுநர்கள் வாடிக்கையாளர்களுடன் சண்டையிடுவது, அவர்களை துன்புறுத்துவது போன்ற பல சம்பவங்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது பார்த்திருப்பீர்கள்.
ஆனால் ஊபர் ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் இளம் பெண்ணுக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவருடன் நடந்த உரையாடலின் போது விவசாயம் மற்றும் இயற்கை குறித்து கலந்துரையாடினார். ஆட்டோ ஓட்டுநர் பூக்கள் மீதுள்ள காதலையும் வெளிப்படுத்தினார்.
இந்த நேரத்தில் ஓட்டுநர் புன்னகையுடனும், கண்களில் நீருடனும் காணப்படகிறார். அவர் பூவை அந்த பெண்ணிடம் இருந்து வாங்கி ஆட்டோவில் இருந்த விநாயகர் சிலை மீது வைத்தார். இந்த வீடியோ avinat என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. மேலும், தலைப்பில், ஓட்டுநருடனான இந்த சிறப்பு பயணம் மற்றும் அவரது தொடர்பு பற்றிய சுருக்கமான தகவலை அவர் அளித்துள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலவிதமான கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர். ஒரு பயனர், "அவரது கண்கள் அந்த ஒரு சிறிய ரோஜாவால் அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது" என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில வைரலாகி வருகிறது.