Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உ.பி.யில் பெண் போலீஸ் தாக்கப்பட்ட சம்பவம் - மதவாத காரணமா? | உண்மை என்ன?

05:00 PM Dec 12, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact Checked by Newsmeter

Advertisement

உத்தர பிரதேசத்தில் பெண் போலீஸ் தாக்கப்பட்ட சம்பவத்தில் மதவாத காரணம் இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இது தொடர்பான உண்மை தன்மையை காணலாம்.

உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையில் நடந்து சென்ற பெண்ணை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தடுத்து நிறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர் அவர் அந்த பெண்ணை தாக்குகிறார். ஏறக்குறைய இரண்டரை நிமிடம் கொண்ட வீடியோவில் அந்த பெண்ணுடன் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வீடியோவைப் பகிர்ந்த சமூக ஊடக பயனர்கள் தாக்கப்பட்ட பெண் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் என்றும் அவர் ஒரு இந்து என்றும் கூறினர். அதே சமயம் பைக்கில் வந்து அந்த பெண்ணை தாக்கிய நபர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் பகிர்ந்து வருகின்றனர். முகநூல் பயனர் ஒருவர் இந்த காணொளியை பதிவேற்றம் செய்து, "உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் இர்பான் என்ற இஸ்லாமிய வாலிபரால் இந்து பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். காவல் சீருடையில் இருக்கும் ஒரு பெண்ணைத் தாக்கத் துணிந்தாலும், அவர்கள் உங்களை என்ன செய்வார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். இது போன்ற நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எழுதினார்.

உண்மைச் சரிபார்ப்பு:

இந்த செய்தியின் நம்பகத்தன்மை குறித்து நியூஸ்மீட்டர் ஆய்வு செய்தபோது, அந்த வீடியோ தவறானது என கண்டறியப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நவம்பர் 30ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட பெண் காவலர் இந்து அல்ல, முஸ்லிம் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உண்மையை அறிய முதலில் வைரலான வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்தோம். பின்னர் டிசம்பர் 2, 2024 அன்று, அதே வைரல் வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டுடன் ஆஜ தக ஒரு செய்தியை வெளியிட்டது.

அந்த அறிக்கையின்படி, இந்த சம்பவம் மொராதாபாத்தில் சிவில் லைன்ஸின் சக்கர் கி மிலாக் பகுதிக்கு அருகில் நவம்பர் 30, 2024 அன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட பெண் கான்ஸ்டபிளின் பெயர் அம்ரீன். அந்த பெண் காவல் சீருடையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்படி கேட்டார். இது தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் மற்றும் உடன் வந்தவர்கள் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அந்த பெண்ணின் தலை மற்றும் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அம்ரீன், சிவில் லைன்ஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கிறார். இதன்பேரில், பழைய ஆர்டிஓ அலுவலகத்தில் வசிக்கும் ஷஹாதத்தின் மகன் இர்பான், சக்கரையைச் சேர்ந்த மிலாக், சமோசவலி கலியைச் சேர்ந்த அஃப்சர் அலியின் மகன் சலீம், நயீம் உட்பட 6 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம், 2023 பிரிவு 191 (2), 315 (2) 352 மற்றும் பிரிவு 76 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்ற ஆங்கில செய்தி போர்ட்டலும் இதே வீடியோவைப் பகிர்ந்து அதனைத் தெரிவித்தது. இந்த சம்பவம் குறித்து மொரதாபாத் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காவல் நிலையத்தின் சிவில் லைன்களுக்குள் நடந்ததாக போலீஸ் அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன் கபரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இச்சம்பவம் குறித்த அறிக்கையையும் எங்களால் காண முடித்து. அதில் பெண் கான்ஸ்டபிள் அம்ரீன் என அடையாளம் காணப்பட்டார்.

முடிவு :

இந்த தகவல்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண் கான்ஸ்டபிளின் பெயர் அம்ரீன் என்பதும் அவர் ஒரு முஸ்லிம் பெண் என்பதும் தெளிவாகிறது. வைரலான பதிவில், பாதிக்கப்பட்ட பெண் இந்து என்றும், இச்சம்பவம் மதவாதம் தொடர்புடையது என்றும் கூறி பொதுமக்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர். எனவே வைரலான வீடியோ தவறானது.

Note : This story was originally published by Newsmeter and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Fact CheckMoradabadnews7 tamilPolice Constableuttar pradeshviral video
Advertisement
Next Article