சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் உயிரிழப்பு!
சென்னை, சூளைமேடு வீரபாண்டியன் தெருவில் வசித்து வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இன்று காலை மழைநீர் வடிகால் நடைபாதையில் நடந்து சென்ற போது தவறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளைமேடு போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி கேகே நகர் சி எஸ் ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், "சென்னையில் கடந்த வாரம் முதல் தொடர்ச்சியாக பெய்த மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளான சாலைகளில் மழை நீரை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் ஒப்பந்த பணியாளர்கள் மழைநீர் வடிகால் பணிகளை சரியாக செய்யாமல் மட்டைப் பலகையை போட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மட்டைப் பலகை மீது கால்வைத்த பெண் பலகை உடைந்து மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்த பெண்ம குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.