74 வயதில் தனது 60வது முட்டையை பாதுகாத்து வரும் மிகப் பழமையான காட்டுப்பறவை ‘விஸ்டம்’!
தனது 74வது வயதில் 60வது முட்டை இட்ட உலகின் மிகப் பழமையான காட்டுப்பறவை ‘விஸ்டம்’ குறித்து தமிழக சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகின் மிகப் பழமையான காட்டுப் பறவை என லேசன் அல்பாட்ராஸ் இனத்தை சேர்ந்த பறவை (தோராயமாக 74 வயது) முட்டையிட்டுள்ளதாக அமெரிக்க உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர். விஸ்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த பறவை பசிபிக் பெருங்கடலில் உள்ள மிட்வே அட்டோல் தேசிய வனவிலங்கு புகலிடத்தில் தனது சமீபத்திய கூட்டாளியுடன் முட்டையை கவனித்துக் கொண்டது படமாக்கப்பட்டது.
இந்த இனம் பொதுவாக 12-40 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழும். இந்த விஸ்டம் பறவை மேலும் முட்டைகளை இடுவதற்கு 70 முதல் 80% வரை வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அறியப்பட்ட மிகப் பழமையான காட்டுப் பறவையான விஸ்டம் எனும் லேசன் அல்பாட்ராஸ் பறவை குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். அந்த பதிவில்,
“விஸ்டமை சந்திக்கவும், காலத்தை மீறி, உலகை தொடர்ந்து ஊக்குவிக்கும் லேசன் அல்பாட்ராஸ்! 74 வயதில், தனது 60வது முட்டையை இட்டு, இயற்கை நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்தது என்பதை நிரூபித்துள்ளார். உலகில் அறியப்பட்ட மிகப் பழமையான காட்டுப் பறவையான விஸ்டம், 1956 ஆம் ஆண்டு முதன்முதலில் கட்டமைக்கப்பட்டதிலிருந்து மீள்தன்மை மற்றும் விடாமுயற்சியின் அடையாளமாக இருந்து வருகிறது.
தனது வாழ்நாளில், அவர் சுமார் 30 குஞ்சுகளை வளர்த்து, பரந்த கடல்களில் எண்ணற்ற மைல்கள் பறந்து, தலைமுறை பாதுகாப்பாளர்களுக்கு ஊக்கமளித்துள்ளது. ஹவாயில் உள்ள மிட்வே அட்டோல் தேசிய வனவிலங்கு புகலிடத்திற்குத் திரும்பிய பிறகு, விஸ்டம் தனது 60வது முட்டையை இட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான கடல் பறவைகள் கூடு கட்டுவதற்கும் தங்கள் குஞ்சுகளை வளர்க்கும் இடத்தில் தனது பாரம்பரியத்தைத் தொடர்வதற்கும் ஊக்குவிக்கிறது விஸ்டம்”
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இதற்கு அடுத்த வகையில், அதிய வயது உயிருடன் இருந்த பறவையாக குறிக்கப்பட்டுள்ளது 45 வயது கொண்ட பறவை என்பது குறிப்பிடத்தக்கது.