Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிச.4 முதல் குளிர்கால கூட்டத்தொடர் : 19நாட்களில் 15அமர்வுகள் - பிரகலாத் ஜோஷி அறிவிப்பு..!

08:27 PM Nov 09, 2023 IST | Web Editor
Advertisement

டிச.4 முதல் குளிர்கால கூட்டத்தொடர்  நடைபெற உள்ள நிலையில் 19நாட்களில் 15அமர்வுகள் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.

Advertisement

மழைகால கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் 4ம்தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத் தொடரில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றான 3 மசோதாக்கள், குளிா்கால கூட்டத் தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த மசோதாக்களின் வரைவு அறிக்கைகளை, உள்துறை விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழு அண்மையில் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தலைமை தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக ஏற்கெனவே நிலுவையிலுள்ள முக்கிய மசோதாவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வழக்கமாக குளிா்கால கூட்டத் தொடா் நவம்பா் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக நிறைவடையும். ஆனால், மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்ட பேரவைத் தோ்தல் நடைபெறுவதால், குளிா்கால கூட்டத் தொடரின் நாள்கள் குறைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேய ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்திய தண்டனைச் சட்டம் 1860-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மசோதா 2023’, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மசோதா-2023’, இந்திய சாட்சிய சட்டம் 1872-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய சாக்ஷிய (பிஎஸ்) மசோதா 2023’ ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இதேபோல், தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பான மசோதாவும் மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் அந்தஸ்தை அமைச்சரவைச் செயலா் அளவில் கொண்டுவர வகைசெய்யும் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தோ்தல் ஆணையத்தின் தன்னாட்சியை பாதிக்கும் வகையில் இந்த மசோதா உள்ளதாக அவை குற்றம்சாட்டின. இதனிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த செப்டம்பரில் நடைபெற்றது. அதில் மேற்கண்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டவில்லை.

இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4 முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத் தொடர் 19 நாட்கள் நடைபெறும் எனவும்  இக்கூட்டத்தொடரில் மொத்தம் 15 அமர்வுகள் இருக்கும் எனவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Tags :
Amith shaLawmodiParliament Winter Sessionparlimentunion govtWinter Session
Advertisement
Next Article