Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இதே உத்வேகத்தோடு சாம்பியன்ஸ் ட்ராஃபியை வெல்லுங்கள்" - இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
10:23 AM Feb 24, 2025 IST | Web Editor
Advertisement

8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

இதையும் படியுங்கள் : அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு லேசான மழைக்கு வாய்ப்பு!

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடியது. முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 20 ரன்களிலும், சுப்மன் கில் 46 ரன்களிலும் வெளியேறினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.

பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்களில் அவுட் ஆனார்.  இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. விராட் கோலி சதம் அடித்தும், அக்சர் படேல் 3 ரன்களிலும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் விராட் கோலி அதிக ரன்களை குவித்த வீரர் என்கிற அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்கிற சாதனையையும் படைத்தார்.

இந்திய அணியின் அபார வெற்றிக்கு பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது..

“ இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது; மாஸ்டர்கிளாஸ் சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற விராட் கோலிக்கு பாராட்டுக்கள்; இதே உத்வேகத்தோடு தொடர்ந்து விளையாடி சாம்பியன்ஸ் ட்ராஃபியை வெல்லுங்கள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
ICCICC Champions TrophyIND VS PAKMK StalinVirat Kholi
Advertisement
Next Article