Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜயின் அரசியல் தாக்கம் புதுச்சேரியில் எடுபடுமா? - சபாநாயகர் செல்வம் நச் பதில்!

விஜயின் அரசியல் தாக்கம் புதுச்சேரியில் எடுபடுமா? என்ற கேள்விக்கு சபாநாயகர் செல்வம் பதிலளித்துள்ளார்.
12:21 PM Jun 11, 2025 IST | Web Editor
விஜயின் அரசியல் தாக்கம் புதுச்சேரியில் எடுபடுமா? என்ற கேள்விக்கு சபாநாயகர் செல்வம் பதிலளித்துள்ளார்.
Advertisement

காரைக்காலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புதுச்சேரி சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

Advertisement

அப்போது அவர் பேசியதாவது, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 2026 ல் தேர்தலிலும் தொடரும். முதலமைச்சர் ரங்கசாமி தான் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளர். அவரது தலைமையில் உள்ள கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்” என்றார்.

தொடர்ந்து அவரிடம் தமிழ்நாட்டில் விஜயின் அரசியல் தாக்கம் புதுச்சேரியில் எடுபடுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,  “புதுச்சேரியை பொருத்தவரை எந்த நடிகருடைய தாக்கமும் எடுபடாது. புதுச்சேரியைச் சார்ந்த மண்ணின் மைந்தர்களுக்கே இங்கு வாய்ப்பு. எந்த நடிகர் அரசியல் வேலையும் எடுபடாது.  விரைவில் புதுச்சேரியில் சட்டசபை கூடும் மக்களுக்கான நிறைய நலதிட்டங்கள் அறிவிப்புகள் வெளியாகும்”

இவ்வாறு புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags :
#selvamPuducherrypuducherry speakertvkTVK Vijay
Advertisement
Next Article