Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மார்ச் 14 முதல் விஜய்க்கு Y பாதுகாப்பு பிரிவு?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கிய Y பிரிவு பாதுகாப்பை மார்ச் 14ஆம் தேதி முதல் ஏற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்.
07:04 PM Mar 11, 2025 IST | Web Editor
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கிய Y பிரிவு பாதுகாப்பை வரும் 14ஆம் தேதி முதல் அவர் ஏற்றுக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 8 முதல் 11 CRBF வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ள விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தவெக கட்சியைத் தொடங்கினார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல பொது இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே விஜய் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பிற்காக Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என சில நாட்களுக்கு முன்பாக மத்திய அரசு அறிவித்தது.

கடந்த இரண்டு நிகழ்ச்சிகளில் விஜய்யின் பாதுகாப்பிற்கு எந்த அதிகாரிகளும் வராத நிலையில் 14-ம் தேதிக்கு பிறகு நடைபெறும் நிகழ்ச்சியில் CRBF வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.

Tags :
tvkTVK VijayvijayY Scale Security Cover
Advertisement
Next Article