கல்வி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் விஜய்க்கு ஓட்டுக்கு போடுவீர்களா? சீமான்!
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "கரூர் சம்பவத்தை அரசியல் நோக்கத்துடன் பேசுவதை வெறுக்கின்றேன். ஒரு சில தலைவர்கள் கரூர் சம்பவம் குறித்து வேதனை கூட தெரிவிக்காதது வருத்தம். இனி கரூர் போல் சம்பவம் நடைபெறாமல் பார்த்துகொள்ள வேண்டும். திமுக-வினால் என்னை கட்டுபடுத்த முடியாமல் என்னை சிறையில் அடைத்தனர்.
ஏமாற்றி வாக்குகளை வாங்குவதுதான் திமுக வேலை. எதிர்த்து பேசினால் என்னை பாஜகவின் ஏ டீம் என்று சொல்வார்கள். அப்போ பி டீம் திமுக-வா? இந்த தேர்தலில் பாஜக போட்டியில் இல்லை, ஏனென்றால் பாஜகவே அதிமுகவின் முதுகுக்கு பின்னால் தான் நிற்கின்றது. இந்த தேர்தலில் போட்டி என்பது அதிமுக - திமுக இடையே தான். கரூர் விவகாரத்தில் அண்ணன் திருமாவளவன் பேசுவது உண்மையாக இருக்கலாம். ஏனென்றால் அவர் திமுக கூட்டணியில் இருக்கின்றார்.
தூத்துக்குடி விவகாரம் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் கரூர் விவகாரம் மட்டும் மத்திய அரசின் கண்ணுக்கு தெரிகின்றது. தூத்துக்குடி விவகாரத்தில் மனு கொடுக்க வரும் இடத்தில் கலவரம் நடக்கும் என்று எப்படி தெரியும். காத்திருந்து துப்பாக்கி சூடு நடத்த அனுமதி கொடுத்து சுட்டு கொள்ள சொன்னது யார்?
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் விசாரணை நடத்திய அதே ஒரு நபர் விசாரணை ஆணையம் தான் கரூர் விவகாரத்தையும் விசாரணை நடத்துகின்றது. தூத்துக்குடி விவகாரத்தில் விசாரணை ஆனையதின் அறிக்கை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுத்தது.
தேர்தல் வருவதால் கண்துடைப்புக்குதான் இந்த விசாரணை ஆனையம். கரூர் விவகாரத்தில் அதன் கட்சி தலைவர்தான் பொறுப்பேற்க வேண்டும். ஒரு சிறிய வருத்தம் தெரிவித்துவிட்டு அப்படியே இருந்துவிட்டால் போதுமா?
நாட்டில் கல்வியாளர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். ஆனால் கல்வியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் யார் யார் முதல்வர், துணை முதல்வர், திரைத்துறையினர். திறைத்துறையினரை இப்படி பயன்படுத்துவதால் தான் அவனுக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை வருகின்றது. இதனால் தான் திரையில் உள்ளவன் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைபடுகின்றார்.
கல்வியாளர் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் விஜய்க்கு ஓட்டுக்கு போடுவீர்களா? விஜய் பேச்சை யாராவது கேட்கின்றார்களா, அவர் படம் ரீலிஸ்சானா முதல்நாள் கூட்டம் எப்படி இருக்குமோ அப்படிதான் நடந்து கொள்கின்றார்கள். விஜய் செல்லும் இடங்களில் மற்றபடி அவர் பேச்சை கேட்க அல்ல, கல்விக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது குறித்து திமுக நடத்திய கல்வி மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
கரூர் சம்பவத்தை வைத்து கூட்டணிகள் மாறும் என்பது எனக்கு தேவையில்லை, நாம் தமிழர் தனித்துதான் போட்டியிடுகின்றது. திமுக-விற்கும் தவெக-விற்கும் தான் போட்டி என்று சொல்லும் விஜய் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடக்கும்போது எங்கு சென்றார், அன்று திமுகவிற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தான் போட்டி நடந்தது என்று தெரிவித்துள்ளார்.