“இனி தேர்தல் இருக்குமா ?... இருக்காதா ?... என தீர்மானிக்க போகின்ற தேர்தல் இது” -தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி பரபரப்பு பேச்சு
“இனி தேர்தல் இருக்குமா ? இருக்காதா என தீர்மானிக்க போகின்ற தேர்தல் இது” என எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர். தமிழச்சி தங்க பாண்டியன்
கலந்து கொண்டு பேசினார்.
குறைந்த பட்ச ஆதார விலை கேட்டு போராடும் விவசாயிகளை மோடி அரசு அடக்கு முறையை ஏவுகிறது, பாரத பிரதமர் மோடி விளம்பரம் மோக தலைவராக உள்ளார் என்றும் நாம் ஒரு ரூபாய் தந்தால் நமக்கு 29 காசுகள் தான் மத்திய அரசு திருப்பி தருகிறது.
நமக்கான நிதியை பிற மாநிலங்களுக்கு மடை மாற்றம் செய்கிறது மத்திய அரசு.
தமிழ்நாட்டு மீது நயவஞ்சகம் செய்துள்ளது. பிரிவினையை ஏற்படுத்தி மத வெறியை
தூண்டி வருகிறது பாஜக. நாம் விழித்து எழ வேண்டும்.
தேர்தல் இருக்குமா ? இருக்காதா ? ஜனநாயக மரபு இருக்குமா ? இல்லையா ? என
தீர்மானிக்கப் போகின்ற தேர்தல், சமதர்மம் தழைக்குமா ? தழைக்காதா ? மாநிலங்களுக்குச் சுயாட்சி இருக்குமா ? இல்லையா ? என்பதை நிர்ணயம் செய்கின்ற தேர்தல் என்றும் மேலும் எனிமேல் மாநிலங்களுக்கு தனித்தனியாகத் தேர்தல் நடத்தப்படுமா ? இல்லையா என முடிவு செய்கின்ற தேர்தல் என பேசினார்.
மேலும், அந்த களம் எப்படி இருந்தாலும் எதிரிகளை உடன்பிறப்புகளுடன் இணைந்து
நாடளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி வாகை சூடுவோம் இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் , சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, சட்ட மன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.