Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெள்ள பாதிப்பால் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா? அமைச்சர் #AnbilMahesh விளக்கம்

12:31 PM Dec 04, 2024 IST | Web Editor
Advertisement

வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் அரையாண்டு தேர்வு எழுத முடியாத சூழல் இருந்தால், அந்த தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

இந்த கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலை, ரயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் அரையாண்டு தேர்வு எழுத முடியாத சூழல் இருந்தால், அந்த தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,

"வெள்ளம் பாதித்த 15 மாவட்ட கல்வி அலுவலர்களோடு நேற்று ஆலோசனை நடத்தினோம். விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 45 பள்ளிகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. பள்ளிகளில் மழைநீர் புகுந்திருந்தால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மழைநீர் வடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுக்குக்கான பணிகள் முடிவடைந்துவிட்டன. டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த அரையாண்டு செய்முறை தேர்வு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும்.

டிச.9ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் அந்த தேர்வுகளும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும். மாணவர்களின் பாதுகாப்பு தான் முக்கியம். எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்"

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article