Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்!

04:48 PM May 26, 2024 IST | Web Editor
Advertisement

நெல்லை மணிமுத்தாறு மலையடிவாரத்தில் விவசாயி ஒருவரின் 2 மாடுகள் உயிரிழந்த நிலையில், மாடுகளை தாக்கியது சிறுத்தையாக இருக்கக்கூடும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் அனவன் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சிறுத்தையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டனர்.

இதனையடுத்து, கடந்த 17-ம் தேதி சிக்கிய சிறுத்தை,  மணிமுத்தாறு அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.  தொடர்ந்து 21, 22-ம் தேதிகளில் 2 சிறுத்தைகள் சிக்கிய நிலையில், அவை பாபநாசம் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.  இருப்பினும், அனவன் குடியிருப்பு வேம்பையாபுரம் பகுதிகளில் மேலும் 2 சிறுத்தைகள் உலா வருவதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து பொதுமக்கள் அப்பகுதியில் அச்சத்தோடு இருந்த நிலையில், வனத்துறையினர்
அவற்றைப் பிடிப்பதற்கு கூண்டுகளை வைத்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.  இதனையடுத்து கடந்த 23 ஆம் தேதி இரவு 4-வதாக மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.  இந்த சிறுத்தையும் மணிமுத்தாறு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

மணிமுத்தாறு மலையடிவாரத்தில் விவசாயி சிவசுப்பிரமணியன் என்பவரது 2 மாடுகள் உயிரிழந்த நிலையில் வனவிலங்கு கடுமையாக தாக்கியதில் அவை உயிரிழந்ததாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மாடுகளை தாக்கியது சிறுத்தையா என எண்ணி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியானால், அதனை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
forestleopardNellai
Advertisement
Next Article