Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாளை ரேஷன் கடைகள் செயல்படுமா? தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

04:56 PM Jan 09, 2025 IST | Web Editor
Advertisement

பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக அனைத்து ரேஷன் கடைகளும் நாளை செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

"தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2,20,94,585 குடும்பஅட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்க ஆணையிட்டுள்ளார்.

மேலும், பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று (09.01.2025 வியாழன்) சைதாப்பேட்டை சின்ன மலையில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக நாளை (ஜன.10) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு தொகுப்பினைப் பெற்றுப் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article