Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு!

04:21 PM Mar 26, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் போட்டியிட பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம்,  பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும்,  வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய தரப்பு தரப்பு வழக்கறிஞர்,  சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என்றும்,  மதிமுகவின் கோரிக்கை மீது இன்று முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  பம்பரம் சின்னம் கோரி மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.  இதற்கு, சின்னம் ஒதுக்குவது தொடர்பாக நாளை முடிவெடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.  இதனை அடுத்து வழக்கு நாளை பிற்பகல் 2.15மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags :
DMK AllianceElection commissionElections with News7 tamilloksabha election 2024Madras High CourtMDMKnews7 tamilNews7 Tamil UpdatesPambaram
Advertisement
Next Article