Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆஸ்கரை வெல்லுமா இந்தியா...? - 2024 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழாவிற்கான இறுதிப் பட்டியல் இதோ..!

10:05 PM Jan 23, 2024 IST | Web Editor
Advertisement

 2024 ஆம் ஆண்டிற்கான 96-வது ஆஸ்கர் விருது விழாவிற்கு ’ஓபன்ஹைமர், பார்பி’ உள்ளிட்ட திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கபட்டுள்ளது. 

Advertisement

உலக சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் மிகப்பெரிய விழாவாக நடத்தபட்டு, தகுதியான படங்களை தேர்வு செய்து அதற்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2024 ஆம் ஆண்டிற்கான 96-வது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெற உள்ளது. இந்த ஆஸ்கர் விருது விழாவிற்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற ’ஓபன்ஹைமர், பார்பி’ உள்ளிட்ட திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்; “பாஜகவின் திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குறிப்பாக 'ஓபன்ஹைமர்' 13 விருதுகளுக்கும், 'புவர் திங்ஸ்' 11 விருதுகளுக்கும், 'Killers of the Flower Moon' 10 விருதுகளுக்கும், 'பார்பி' 8 விருதுகளுக்கும், 'Maestro' படம் 7 விருதுகளுக்கான இறுதி பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன. இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த இயக்குநர் நிஷா பஹுஜா இயக்கிய 'To Kill a Tiger' திரைப்படம் 'சிறந்த ஆவணப்படம்' பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இத்திரைப்படம் ஜார்கண்ட்டைச் சேர்ந்த இந்திய விவசாயி தன் வாழ்கையில் சந்திக்கும் பிரச்னைகளையும், கொடூரமான கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தனது 13 வயது மகளுக்கு நீதி கேட்டுப் போராடும் அவரது போராட்டத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ஏற்கெனவே பல விருதுகளை வென்ற இந்த ஆவணப்படம் ஆஸ்கரை வெல்லுமா என்று ரசிகர்களிடையை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்கர் போட்டியின் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ள திரைப்படங்கள் பிரிவு வாரியாக:

சிறந்த திரைப்படம் 

சிறந்த நடிகர்

சிறந்த நடிகை

சிறந்த இயக்குநர்

 

 

Tags :
AmericanFictionBarbiedirectorsIndiaKillersOfTheFlowerMoonMoviesOppenheimerOscarNominationsOscars2024PoorThingsToKillATiger
Advertisement
Next Article