டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? - இங்கிலாந்து அணியுடன் இன்று மோதல்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் தொடர்கள் கொண்ட போட்டியில் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று (ஜுன் 20) மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இரு நட்சத்திர வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் இளம் இந்திய அணி இப்போட்யில் களமிறங்கவுள்ளது.
சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தவுள்ளார். டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடன் எழுந்துள்ளது. டெஸ்ட் தொடரை கைப்பற்ற இரு அணிகளும் மாறி மாறி போராடும். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இரு அணி வீரர்களின் விவரம்
இந்தியா: லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், சாய் சுதர்சன் அல்லது வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ்குமார் ரெட்டி அல்லது ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அல்லது ஆகாஷ் தீப்.
இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாமி சுமித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டாங்கு, சோயிப் பஷீர்.