உலகக் கோப்பையை இந்தியா வெல்வது பொருத்தமாக இருக்கும், ஆனால் போட்டியை பார்க்க மாட்டேன் - தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்!
உலகக் கோப்பை இறுதிப்போட்டியைப் பார்க்க மாட்டேன் என தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பைப் தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்று இந்தியா அசைக்க முடியாத அணியாக உள்ளது.
இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்து வெளியேறும் தென்னாப்பிரிக்காவின் நிலை மீண்டும் தொடர் கதையாகியுள்ளது. அகமதாபாத்தில் நாளை மறுநாள் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
"நேர்மையாக கூறவேண்டுமென்றால், உலகக் கோப்பை இறுதிப்போட்டியை நான் பார்ப்பதற்கான வாய்ப்பு ஒரு சதவிகிதம் மட்டுமே உள்ளது. உண்மையில், நான் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பார்க்க மாட்டேன். இறுதிப்போட்டி குறித்து எனக்கு கவலை இல்லை. இருப்பினும், சொந்த மண்ணில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றுவது பொருத்தமானதாக இருக்கும். சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.